Wednesday, 29 July 2015 00:00

Pi Approximation Celebration Day

Π யின் தோராய மதிப்பு தினம்

Π என்ற ஓர் எழுத்தை

பார் என்ற ஈரெழுத்திற்கு அறிமுகம் செய்து

பெளதீக கணக்குகளை எளிமையாகச் செய்ய அரும்பாடுபட்டு Π ன் மதிப்பினைக் கண்டறிந்த அறிஞர்களாம் அவர்களின் அரும்பெரும் வியத்தகு செயல்களை நினைவுகூறும் வகையில் க்வெட் அறிவியல் மையமும் சென்னை மாநகராட்சிப் பள்ளியும் இணைந்து ஒரு பயன்தரும் விழாவாக 22.7.2015 அன்று கொண்டாடியது. அன்றைய தினத்தில் பள்ளி மாணாக்கர்களின் மனதில் Π ன் மதிப்பையும் Π ன் மகத்துவத்தையும் நன்கு புரிந்து மனதில் நிலை நிறுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி பள்ளியில் அமைந்துள்ள க்வெட் - யின் 20 அறிவியல் மையங்களில் மிகச் சிறப்பான விழாவாகக் கொண்டாடியது மிகவும் சிறப்பானதாகும்.



Π ன் மதிப்பை பல்வேறு அறிஞர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.

  • Π என்பது கிரேக்க எழுத்து.
  • பாபிலோனியர்கள் Π ன் மதிப்பு 3 எனவும் (4000 ஆண்டுகளுக்கு முன்னர்)
  • கிரேக்கர்கள் Π ன் மதிப்பு 22/7 அல்லது Π = 3.14 எனவும்.
  • ஆர்க்கிமெடிஸ் Π ன் மதிப்பு 31/7 < Π 310/71 எனவும்.
  • ஆர்யபட்டா Π ன் மதிப்பு 62838/2000 அல்லது 3.1416 எனவும்.

இப்பொழுது Π = 22/7 அல்லது 3.14 என்ற மதிப்பையும் பயன்படுத்துகிறோம்.

மாணவர்கள் தங்களின் பாடக் கருத்துக்களை -யின் வடிவத்தில் படங்களாக வரைந்தும், Π - யின் மதிப்புகளை பாடத்திலுள்ள சூத்திரங்களில் பிரதியிட்டு தீர்வுகளைக் கண்டு திறமையாக விளக்கினார்கள். மேலும் பல அறிவியல் தகவல்களையும் கூறி அவர்களின் திறமையை வெளிப்படுத்திய விதம் மிக அருமையாக இருந்தது.

முடிவில் தலைமை ஆசிரியை/ஆசிரியர் அவர்கள் இவ்விழாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு வினாடி வினா நிகழ்ச்சியை தொகுத்து மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தியது மிகவும் நன்றாக இருந்தது. மேலும் கீழ்காணும் வினாக்களை மாணவர்களிடம் எழுப்பி அவர்களின் பதிலை பெறச் செய்து பரிசுகளை தன் மலர்க் கரங்களால் வழங்கிச் சிறப்பு செய்தார்.

  • Π ன் தோராய மதிப்பு என்ன?
  • Π ன் மதிப்பை கண்டறிந்தவர்களில் எவரேனும் ஒருவரின் பெயரைக் கூறவும்?
  • Π ன் மதிப்பு 22/7 லிருந்து 3.14 ஆக எவ்வாறு வந்தது?


இறுதியாக, இந்த விழாவின் மூலம் மாணவர்கள் Π - யின் முக்கியத்துவத்தினையும் அதன் பயன்பாடுகளையும் மேலும் Π - யின் தோராய மதிப்பு தினத்தைக் கொண்டாடுவதன் அவசியத்தையும் தெளிவாக புரிந்து கொண்டனர்.